திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள "கொரோனா பாதுகாப்பு" என்ற புதிய இணையதள வசதியில் 64 கோவிட்-19 தடுப்பூசி மையங்கள், 61 மாதிரி சேகரிப்பு மையங்கள், 7 பரிசோதனை மையங்கள், 38 பாதுகாப்பு மையங்களின் இருப்பிடங்களில் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மையங்களை எளிதாக வரைபடம் மூலம் காணலாம். நமது மாவட்ட பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை முறையாக செய்து, கொரோனாவிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர், திருநெல்வேலி

தொலைபேசி ஆலோசனை மையம்

கோவிட் தொடர்பான ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

0462 - 2501012 & 0462 - 2501070

வாட்ஸ்அப் : 9499933893 & 6374013254

கீழ்க்காணும் தகவல்களுக்கு பொதுமக்கள் எங்களை அணுகலாம்

  • கோவிட் தொடர்பான அவசர உதவிக்கு
  • கோவிட் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு
  • கோவிட் பரிசோதனை மையங்கள் குறித்த தகவல்களுக்கு
  • கோவிட் கேர் மையங்கள் குறித்த தகவல்களுக்கு
  • கோவிட் தடுப்பூசி மையங்கள் குறித்த தகவல்களுக்கு

கோவிட் நோயாளிகள் கீழ்க்கணும் உதவிகளுக்கு எங்களை அழைக்கலாம்

  • வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உதவிக்கு
  • அவசர மருத்துவ உதவிக்கு
  • தொடர்பில் இருந்தவர்கள் தடமறிதல் தொடர்பாக

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானதா, அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும், எதிர்மறை விளைவுகள் உண்டா, பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா, தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்து கொள்வது, போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இங்கே கிடைக்கும்

வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான நெறிகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கை கழுவுதல், மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுதல் ஆகியவையே சிறந்த வழிகளாகும். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோயின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும்.

நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் 14 நாட்கள் தங்கவேண்டும்.

சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் யை பயன்படுத்த வேண்டும்.

எப்போதும் முகமூடி அணிய வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீ இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளிடமிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

உடைகள், உணவு, பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை மற்றவர்களிடம் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சுகாதாரத்தை பேண வேண்டும்.

வெளியாட்கள் வீட்டுக்குள் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பற்றி (கோவிட் -19)

கொரோனா வைரஸ்கள் என்பவை பெரிய வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இவை சாதாரண சளி முதல் MERS-CoV மற்றும் SARS-CoV போன்ற கடுமையான மூச்சுத்திணறல் நோய்கள் வரை உருவாக்கக்கூடிய குணம் கொண்டவை.

இவற்றுள், கொரோனா வைரஸ் நோய் என்பது 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் நோய் ஆகும். இந்நோய் இதற்கு முன்னர் மனிதர்களிடம் அடையாளம் காணப்படவில்லை.

இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள். வழிகாட்டல்கள், தமிழக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் பரவல் விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தினசரி புதிய தகவல்களுக்கு இந்த பக்கத்தைப் பார்வையிடவும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

மூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்நோய்த் தொற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும். மேலும் இந்நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிமோனியா, கடுமையான சுவாச நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்பும் கூட ஏற்படுத்தலாம்.

வறட்டு இருமல்

சளி

மூச்சு திணறல்

காய்ச்சல்

நாக்கில் சுவை இழப்பு

மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கை கழுவுதல், மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுதல் ஆகியவையே சிறந்த வழிகளாகும். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோயின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும்.

கொரோனோவிற்கு எதிரான தமிழகத்தின் போர் ...

நாம் ஒன்றிணைந்தால் கோவிட்-19 க்கு எதிராக போராடலாம்

கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

  • உங்கள் கையை 20 விநாடிகள் சரியாக கழுவுங்கள்
  • உங்கள் முகத்தைத் தொடாதீர்கள்
  • முகக்கவசம் அணியுங்கள்
  • சமூகக் கூட்டங்களைத் தவிர்க்கவும்
  • ஆல்கஹால் சார்ந்த துப்புரவாளர் மூலம் உங்கள் கையை தேய்க்கவும்
  • உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க கைகளை கைக்குலுக்குவதை தவிர்க்கவும்

கை கழுவும் முறை; கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்...

கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, நமது தனிப்பட்ட சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்துவது முக்கியமானது. குறிப்பாக கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கை கழுவ வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் மற்றும் சோப்பை பயன்படுத்தவும்
உள்ளங்கைகளை முழுவதுமாக கழுவ வேண்டும்
விரல்களுக்கு இடையில் அழுத்தி கழுவவும்
கட்டைவிரலில் கவனம் செலுத்தவும்
கைகளின் பின்புறங்களையும் கவனத்தில் கொள்ளவும்
மணிக்கட்டில் கவனம் செலுத்துங்கள்